Home நாடு புதன்கிழமை அன்வாரைச் சந்தித்து பொதுமன்னிப்பு வழங்குகிறார் பேரரசர்!

புதன்கிழமை அன்வாரைச் சந்தித்து பொதுமன்னிப்பு வழங்குகிறார் பேரரசர்!

1131
0
SHARE
Ad

கோலாலம்பூர் – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு பொதுமன்னிப்பு வழங்க முழு அனுமதி வழங்கிய பேரரசர் சுல்தான் முகமது V, அதற்கான சந்திப்பை நாளை புதன்கிழமை காலை 11 மணியளவில் நடத்தும்படி கூறியிருக்கிறார்.

முன்னதாக இச்சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ரமடானை எதிர்நோக்கியிருப்பதால், இச்சந்திப்பை புதன்கிழமை வைக்கும் படி பேரரசர் தரப்பில் இருந்து கேட்டுக் கொள்ளப்பட்டதால், அந்த சந்திப்பு புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இதனை, அன்வாரின் வழக்கறிஞர் ஆர்.சிவராசா உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இதனிடையே, நாளை பொதுமன்னிப்பு வழங்கப்பட்டவுடன் உடனடியாக அன்வார் இப்ராகிம் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.