கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் நஜிப் துன் அப்துல் ரசாக்கிடம் இருந்து 1 மில்லியன் பணம் பெற்றதற்காகவும் அந்தப் பணத்தை வருமானவரி இலாகாவில் தெரிவிக்காததற்கும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த அம்னோவின் தலைவர்களில் ஒருவரான டான்ஸ்ரீ ஷாரிர் அப்துல் சமாட் நேற்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீதிலான வழக்கை மேலும் தொடர்ந்து நடத்துவதில்லை என சட்டத்துறை அலுவலகம் முடிவு செய்ததைத் தொடர்ந்து ஷாரிர் விடுதலை செய்யப்பட்டார்.
எனினும் இந்த வழக்கு நடத்தப்பட்டது குறித்து தான் வருத்தமடைவதாகவும் ஷாரிர் கூறினார்.
ஷாரிர் ஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமாவார்.