Home நாடு சபா அரசாங்கம் கவிழ்ந்தது – தேசிய முன்னணி ஆதரவை மீட்டுக் கொண்டது

சபா அரசாங்கம் கவிழ்ந்தது – தேசிய முன்னணி ஆதரவை மீட்டுக் கொண்டது

436
0
SHARE
Ad

கோத்தா கினபாலு : ஜிஆர்எஸ் என்னும் கூட்டணியின் கீழ் பெரிக்காத்தான் நேஷனல், தேசிய முன்னணி இணைந்த கூட்டணி சபா மாநிலத்தை ஆட்சி செய்து வந்தது. கடந்த சில நாட்களாக சபாவில் நிலவி வந்த நிச்சயமற்ற அரசியல் நிலைமை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை தேசிய முன்னணி ஜிஆர்எஸ் கூட்டணிக்கு வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொண்டது.

இதைத் தொடர்ந்து சபா முதலமைச்சராக ஹாஜிஜி தொடர்ந்து நீடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அம்னோ (தேசிய முன்னணி), பக்காத்தான் ஹாரப்பான், வாரிசான் ஆகியவை இணைந்த புதிய அரசாங்கத்திற்கு புங் மொக்தார் முதலமைச்சராகத் தலைமையேற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.