17 பகுதிகளைக் கொண்ட, 27 டிசம்பர் 2019 தேதியிட்ட அந்த விரிவான கடிதம் மஸ்லீக்கு அனுப்பப்பட்டதாகவும் ஆனால் அந்த நேரத்தில் மஸ்லீ அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்ததாகவும் அந்தச் செய்தி மேலும் தெரிவித்தது.
பள்ளிகளில் ஜாவி கற்பித்தல், பள்ளிகளுக்கான இலவச இணைய சேவை, பள்ளி மாணவர்களுக்கான இலவசக் காலை உணவு போன்ற விவகாரங்களில் அமைச்சரவையின் முடிவுகளை மஸ்லீ செயல்படுத்தவில்லை எனவும் அந்தக் கடிதத்தில் மகாதீர் தெரிவித்திருந்தார்.
கடிதத்தின் இறுதியில் “எனவே இப்போது நீங்கள் அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்வதற்குப் பொருத்தமான நேரம்” எனவும் மகாதீர் தெரிவித்திருந்ததாகவும் அந்தக் கடிதத்தைக் கண்ணுற்றதாகவும் மலேசியன் இன்சைட் செய்தி விவரித்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்துதான் கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 2) மஸ்லீ தனது பதவி விலகலைச் சமர்ப்பித்தார் எனவும் அந்தச் செய்தி தெரிவித்தது.
தனது 20 மாத அமைச்சுப் பொறுப்பில் பல சிறந்தத் திட்டங்களைக் கொண்டு வந்திருந்தாலும், எதிர்மறையான ஊடக விமர்சனங்களால் தான் பலிகடா ஆக்கப்பட்டதாக மஸ்லீ வருத்தம் தெரிவித்திருந்தார்.