Home நாடு இரண்டு பதவிகளில் ஒன்றை இராஜினாமா செய்யுங்கள்! விக்னேஸ்வரனுக்குக் கோரிக்கை

இரண்டு பதவிகளில் ஒன்றை இராஜினாமா செய்யுங்கள்! விக்னேஸ்வரனுக்குக் கோரிக்கை

1497
0
SHARE
Ad
மஇகாவின் 10-வது தேசியத் தலைவராக விக்னேஸ்வரன்

கோலாலம்பூர் – நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவி, அல்லது மஇகா தேசியத் தலைவர் பதவி என தற்போது வகித்து வரும் இரண்டு பதவிகளில் ஒன்றை டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இராஜினாமா செய்ய வேண்டும் என ஜசெகவின் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கோரிக்கை விடுத்துள்ளார்.

“நாடாளுமன்ற மேலவைத் தலைவராகத் தொடர விரும்பினால், மக்களவைத் தலைவர் முகமட் அரிப் முன்னுதாரணமாக வழிகாட்டியிருப்பது போல் தனது கட்சிப் பதவிகளிலிருந்து விக்னேஸ்வரன் விலகிக் கொள்ள வேண்டும்” என்றும் லிம் வலியுறுத்தினார்.

அமனா நெகாரா கட்சியில் சில பொறுப்புகளை வகித்து வந்த மக்களவைத் தலைவர் முகமட் அரிப் முகமட் யூசோப் நேற்று மக்களவைத் தலைவராகப் பதவிப்பிரமாணம் எடுப்பதற்கு முன்பான தனது கட்சிப் பதவிகள் அனைத்திலும் இருந்து விலகி விட்டதாக அந்தக் கட்சி அறிவித்தது. எனவே, முகமட் அரிப் கட்சி பேதமின்றி நடு நிலையோடு நாடாளுமன்ற விவாதங்களை நடத்த முடியும் என்றும் அமானா கட்சி தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

அதே அடிப்படையில் விக்னேஸ்வரனும் செயல்பட வேண்டும் என லிம் லிப் எங் அறைகூவல் விடுத்துள்ளார்.