Home கலை உலகம் சூர்யா-கார்த்தி விவசாயிகளுக்கு 1 கோடி ரூபாய் வழங்கினர்

சூர்யா-கார்த்தி விவசாயிகளுக்கு 1 கோடி ரூபாய் வழங்கினர்

1651
0
SHARE
Ad

சென்னை – நடிகர்களாக இருந்தாலும், பல்வேறு சமூகப் பணிகளில் – குறிப்பாக கல்விப் பணிகளில் ஈடுபட்டு வரும் நடிகர் சூர்யா மற்றும் அவரது சகோதரர் கார்த்தி இருவரும் விவசாயிகளின் நலன்களுக்காக 1 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியிருக்கின்றனர்.

சூர்யாவின் தயாரிப்பில் அண்மையில் வெளிவந்த ‘கடைக்குட்டி சிங்கம்’ வசூலில் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் சூர்யாவின் தம்பி கார்த்தி கதாநாயகனாக நடித்திருந்தார்.விவசாயியாக கார்த்தி நடித்திருந்த இந்தப் படத்தில் விவசாயிகள் சம்பந்தப்பட்ட பல விவகாரங்கள், வசனங்கள் இடம் பெற்றிருந்தன.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கொண்டாடப்பட்ட வெற்றி விழாவில் படக்குழு சார்பில் விவசாயிகளின் நலன்களுக்காக 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. விவசாயிகள் நலன்களுக்காகப் பணியாற்றும் ஐவருக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

வைரமுத்து வாழ்த்துக் கவிதை

#TamilSchoolmychoice

சூர்யா-கார்த்தியின் நற்பணிகளைப் பாராட்டி வாழ்த்து ஒன்றை கவிதை வடிவில் கவிப்பேரரசு வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்தக் கவிதை இதோ:

அண்ணன் சிவகுமார் பெற்றெடுத்த

சிங்க மைந்தர்கள்

வேளாண்குடி மக்களுக்கு ஒரு கோடி ரூபாய்

வழங்கியதை வரவேற்கிறேன்; வாழ்த்துகிறேன்.

அன்பு சூர்யா! கார்த்தி! உங்களால் கலைக்குடும்பத்தின்

சமூகமதிப்பு உயர்ந்திருக்கிறது.

கலைத்தொண்டு தொடரட்டும்; காலம் கைதட்டும்.