Home இந்தியா கருணாநிதி கவலைக்கிடம் – முதல்வரைச் சந்தித்தார் ஸ்டாலின்!

கருணாநிதி கவலைக்கிடம் – முதல்வரைச் சந்தித்தார் ஸ்டாலின்!

1365
0
SHARE
Ad

சென்னை – திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல்நலம் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வரும் நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கலைஞரின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் முதல்வரிடம் விளக்கியதாக ஊடகங்கள் தெரிவித்தன.

சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற அந்தச் சந்திப்பின்போது மு.க.அழகிரி, கனிமொழி ஆகியோரும் உடனிருந்தனர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் காவேரி மருத்துவமனை முன்பு காவல் துறையினர் கூடுதலான அளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.