Home நாடு நஜிப் மீண்டும் நீதிமன்றத்தில்…

நஜிப் மீண்டும் நீதிமன்றத்தில்…

1122
0
SHARE
Ad
நஜிப் துன் ரசாக் – கோப்புப் படம்

கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரம் தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது புதிய குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படுகின்றன. எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் சம்பந்தப்பட்ட கள்ளப் பண பரிமாற்றம் தொடர்பில், நாளை புதன்கிழமை நஜிப் மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்.

ஜாலான் டூத்தாவில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) கள்ளப் பண பரிமாற்றம் மற்றும் அம்லா எனப்படும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஆகியவை தொடர்பில் மேலும் 3 புதிய குற்றச்சாட்டுகளை ஊழல் தடுப்பு ஆணையம் நஜிப் மீது சுமத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே நஜிப் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் மீதிலான வழக்கு நிர்வாகம் மீதிலான விசாரணை நாளை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் என ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்தப் புதிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 5 மில்லியன் ரிங்கிட் அபராதம், அல்லது 5 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.