பெட்டாலிங் ஜெயா – எதிர்வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ செத்தியா சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் முதன் முறையான பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அதன் சொந்த சின்னத்தில் போட்டியிடும்.
அங்கு போட்டியிடும் பக்காத்தான் கூட்டணி வேட்பாளராக பிகேஆர் கட்சியின் ஹலிமே அபு பாக்கார், பிகேஆர் கட்சியின் தலைவர் வான் அசிசாவால் அறிவிக்கப்பட்டார்.