Home நாடு பலாக்கோங் : பக்காத்தான் வெற்றி – மசீச படுதோல்வி

பலாக்கோங் : பக்காத்தான் வெற்றி – மசீச படுதோல்வி

935
0
SHARE
Ad
balakong-by-election

கோலாலம்பூர் – இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநிலத்தின் பலாக்கோங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தனது சொந்த சின்னத்தில் தனித்துப் போட்டியிட்ட மசீச வெறும் 3,975 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்திருக்கிறது.

பாஸ் கட்சியுடன் கைகோர்த்த காரணத்தினால்தான் மசீச இத்தகைய படு மோசமான தோல்வியைச் சந்தித்தது என்றும் பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

தேசிய முன்னணி சின்னத்தைப் பயன்படுத்தாததும் மசீவின் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

பலாக்கோங் இடைத் தேர்தலில் 43 விழுக்காட்டு வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்திருக்கின்றனர். மலேசிய வரலாற்றிலேயே மிகக் குறைந்த வாக்களிப்பு விழுக்காடு நடைபெற்ற இடைத்தேர்தலாக பலாக்கோங் திகழ்கிறது.

இதில் பக்காத்தான் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்ட ஜசெக வேட்பாளர் 22,508 வாக்குகள் பெற்றும் 18,533 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்தத் தோல்வியைத் தொடர்ந்து மசீச பாஸ் கட்சியுடனான தனது தேர்தல் இணக்கப் போக்கைத் தொடர்ந்து பின்பற்றுமா அல்லது இனிவரும் காலங்களில் தனது வியூகத்தை மாற்றிக் கொள்ளுமா  என்பது தெரியவரும்.