கோலாலம்பூர், மார்ச் 28 – பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஆப்ரிக்காவில் மிகப்பெரிய முதலீடு செய்த நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தை மலேசியா பிடித்திருக்கிறது என்று ராய்ட்டர் செய்திகளை மேற்கோள்காட்டி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.
சீனாவை பின்னுக்குத் தள்ளி அதைக் காட்டிலும் மிகப் பெரிய அளவில் மலேசியா தனது நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஆப்ரிக்காவில் செய்துவருவதாகப் பிரதமர் தெரிவித்தார். ஆப்ரிக்காவில் பொருளாதார ரீதியாக நல்ல,வலிமையான வாய்ப்புகள் இருப்பதாக நஜிப் கூறினார்.
அமெரிக்க புள்ளிவிவரங்களை வெளியிட்ட ‘ராய்ட்டர்’ செய்திப் பிரிவு இத்தகவலை வெளியிட்டது. மூன்றாவது இடத்தில் மலேசியாவும், முறையே 4,5ஆம் இடங்களில் சீனாவும், இந்தியாவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிக அளவு முதலீடு செய்தவை மலேசியாவின் பெட்ரோனாஸ் மற்றும சைம் டார்பி நிறுவனங்கள் ஆகும்.