Home 13வது பொதுத் தேர்தல் பக்ரி அல்லது கூலாய் தொகுதிகளுக்கு சுவா ஜூய் மெங் குறிவைப்பு?

பக்ரி அல்லது கூலாய் தொகுதிகளுக்கு சுவா ஜூய் மெங் குறிவைப்பு?

638
0
SHARE
Ad

Chua Jui Mengமார்ச் 29 – தான் எதிர்பார்த்தபடி கேலாங் பாத்தா நாடாளுமன்ற தொகுதி கிடைக்காததால் விரக்தியடைந்துள்ள ஜோகூர் மாநில பிகேஆர் தலைவர் சுவா ஜூய் மெங் தற்போது பாக்ரி அல்லது கூலாய் தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் கொண்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்றாவது தேர்வாக சிகாமாட் தொகுதியையும் சுவா குறிவைத்துள்ளார் என பிகேஆர் கட்சியின் தேர்தல் இயக்குநர் ஸ்டீவன் சூங் கூறியுள்ளார்.

இந்த தொகுதிகள் அனைத்தும் கடந்த பொதுத் தேர்தலில் ஜசெக போட்டியிட்டதொகுதிகள் என்பதால் கேலாங் பாத்தா தொகுதிக்கு பதிலாக எந்த தொகுதியை ஜசெக, பிகேஆருக்கு விட்டுக் கொடுக்கும் என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.

#TamilSchoolmychoice

சிகாமாட் தொகுதியில் ஜசெக சார்பாக குலசேகரன், ம.இ.கா தேசியத் துணைத்தலைவர் டாக்டர் சுப்ரமணியத்திற்கு எதிராக களமிறக்கப்படுவார் என்றும் ஜசெக வட்டாரங்களில் கூறப்படுகின்றது.

தொகுதி பரிமாற்றங்கள் குறித்து ஜசெக சார்பாக தான் கோக் வாய்யும், பிகேஆர் சார்பாக அஸ்மின் அலியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்கள்.

பக்ரி – சுவா ஜூய் மெங்கின் முந்தைய தொகுதி

மூவார் நகரை அடுத்துள்ள பக்ரி தொகுதியில்தான் சுவா ஜூய் மெங் 2008ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக சில தவணைகள் மசீச சார்பாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சுவா மீண்டும் போட்டியிட மசீச தலைமைத்துவம் வாய்ப்பு வழங்கவில்லை.

அதனைத் தொடர்ந்து ஜசெக பக்ரி தொகுதியில் 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே, தனது பழைய தொகுதியான பக்ரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதைத்தான் சுவா விரும்புவார்.

கேலாங் பாத்தா தொகுதி லிம் கிட் சியாங்கிற்கு ஒதுக்கப்பட்டது குறித்து சுவா எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் மாறாக தவறான வியாக்கியானங்கள் எழும்பும் என்ற காரணத்தால் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை மட்டும் தவிர்த்து வந்தார் எனவும் ஸ்டீவன் சூங் தெரிவித்துள்ளார்.

மற்றபடி கட்சியின் தலைமைத்துவத்துடனும் மற்ற தலைவர்களுடனும் தொடர்ந்து சுவா தொடர்பில் இருந்து வருகின்றார் என்றும் பிகேஆர் கட்சியின் தேர்தல் இயக்குநருமான ஸ்டீவன் சூங் கூறியுள்ளார்.