Home அரசியல் செகாமாட்டில் அன்வார் உரைக்கு திரண்ட 20,000க்கும் மேற்பட்ட மூவின கூட்டம்

செகாமாட்டில் அன்வார் உரைக்கு திரண்ட 20,000க்கும் மேற்பட்ட மூவின கூட்டம்

947
0
SHARE
Ad

Chua-Jui-Meng-Featureஏப்ரல் 25 – நாடு முழுவதிலும் சூறாவளிச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அன்வார் இப்ராகிமின் உரையைக் கேட்கவும் அவருக்கு ஆதரவு நல்கவும் செகாமாட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூட்டம் திரண்டனர்.

#TamilSchoolmychoice

ஆனால், கம்போங் அப்துல்லாவின் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மூவின மக்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் தாண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இங்கு போட்டியிடும் பிகேஆர் வேட்பாளர் டத்தோ சுவா ஜூய் மெங்கின் வெற்றி வாய்ப்பு பன்மடங்கு பெருகியுள்ளது.

அதே வேளையில், தேசிய முன்னணி வேட்பாளராக இங்கு போட்டியிடும் ம.இ.கா வின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் பலத்த சரிவை எதிர்நோக்கியுள்ளார் என்றும் செகாமாட்டில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

சுவா ஜூய் மெங்கிற்கு அன்வார் பாராட்டு

கூட்டத்தில் பேசிய அன்வார் தனது வழக்கமான பாணியில் பக்காத்தான் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நிகழ்த்தப் போகும் மாற்றங்களைக் கூறிவிட்டு, சுவா ஜூய் மெங்கின் தொகுதி மாற்றத்திற்கான பின்னணிகளையும் விவரித்தார்.

“சுவா, கேலாங் பாத்தா தொகுதியில் கடுமையாகப் பாடுபட்டது உண்மைதான். அவரை அங்கு நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தத்தான் நாங்கள் முடிவு செய்திருந்தோம்”

“ஆனால், லிம் கிட் சியாங் தென் ஜோகூரிலிருந்து ஒரு மிகப் பெரிய உந்துதலை – சுனாமியை உருவாக்க முன்வந்ததால் அதற்கு நாங்கள் ஒப்புக் கொண்டோம்.” என்று அன்வார் கூறினார்.

“இதனால் சுவாவின் தலைமைத்துவ ஆற்றலுக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. ஆனாலும் அந்த இக்கட்டான சூழ்நிலையில் அமைதி காத்து பின்னர் கிட் சியாங்கிற்கும் ஆதரவு நல்கினார். அவரது கடந்த கால பணிகளையும், அவரது கடப்பாட்டினையும் கருத்தில் கொண்டு அவருக்கு செகாமாட் மக்கள் தங்களின் முழு ஆதரவை வழங்க வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டார்.

சுவா ஜூய் மெங் இறுதி நேரத்தில் செகாமாட்டிற்கு மாற்றப்பட்டதால், ஜசெக அதிருப்தி என்றும், பிகேஆர் கட்சியினர் தொய்வடைந்த நிலையில் உள்ளனர் என்றும் தேசிய முன்னணி தரப்பில் கூறப்பட்ட பிரச்சாரங்கள் அனைத்தும் தற்போது அன்வாரின் வருகைக்குப் பிறகு மாற்றம் கண்டுவிட்டன.

தற்போது மக்கள் கூட்டணி கட்சியினர் உற்சாகத்தோடு செகாமாட்டில் சுவாவை வெற்றியடையச் செய்ய கடுமையாகப் பாடுபடத் தயாராகி விட்டனர் என சுவாவின் தேர்தல் பணிக்குழுவில் பணியாற்றுபவர்கள் கூறியுள்ளனர்.

செகாமாட் தொகுதி வாக்காளர் நிலவரம் :

P140-SEGAMAT