Home நாடு சிகாமாட் : எட்மண்ட் சந்தாரா மீண்டும் போட்டி

சிகாமாட் : எட்மண்ட் சந்தாரா மீண்டும் போட்டி

642
0
SHARE
Ad

சிகாமாட் : ஜோகூரின் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர் எட்மண்ட் சந்தாரா மீண்டும் அந்தத் தொகுதியைத் தற்காப்பேன் என அறிவித்தார்.

பிகேஆர் கட்சியின் சார்பில் அந்தத் தொகுதியில் 2018-இல் போட்டியிட்ட அவர்,  மஇகா-தேசிய முன்னணி வேட்பாளர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்தைத் தோற்கடித்தார்.

2020-இல் அவர் பிகேஆர் கட்சியிலிருந்து விலகி ‘ஷெராட்டன் நகர்வு’ திட்டத்தின் கீழ் அஸ்மின் அலியுடன் பிகேஆரில் இருந்து வெளியேறினார். பின்னர் பெர்சாத்து கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

அண்மையில் பிபிஎம் என்னும் பார்ட்டி பங்சா பெர்சாத்து கட்சியில் இணைந்தார். அஸ்மின் அலியோ இன்னும் பெர்சாத்து கட்சியில் தொடர்கிறார்.

எட்மண்ட் சந்தாரா பிபிஎம் கட்சி சார்பில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.