Home 13வது பொதுத் தேர்தல் “இது தான் எனது கடைசி முயற்சி” – அன்வார் இப்ராகிம்

“இது தான் எனது கடைசி முயற்சி” – அன்வார் இப்ராகிம்

571
0
SHARE
Ad

Anwar-feature---4ஜோகூர்பாரு, ஏப்ரல் 25-  எதிர்கட்சிகளின் தலைவராக இருந்து பொதுத்தேர்தலில் மத்திய அரசாங்கத்தை கைப்பற்றும் எனது கடைசி முயற்சி இதுதான் என்றும், அவ்வாறு வெற்றி பெறவில்லை என்றால் அரசியலில் இருந்து விலகி விடுவேன் என்றும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

நேற்று தனது பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக ஜோகூர் பாரு வந்து சேர்ந்த அன்வார் இப்ராகிம் ஜோகூர்பாருவில் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.

“இப்பொதுத்தேர்தலில் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாமல் போனால் நான் தீவிர அரசியலில் இருந்து விலகி பல்கலைக்கழகங்களில் போதிக்கப் போகின்றேன். ஐரோப்பிய  நாடுகளின் பல்கலைக் கழகங்களிலிருந்து எனக்கு போதிக்க அழைப்பு வந்துள்ளது. போதிப்பது என்பது எப்பொழுதும் எனக்கு பிடித்தமான விஷயம்” என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வருவதில் தோல்வி கண்டால்  அரசியலில் இருந்து விலக போவதாக ஏற்கனவே ஓரிரு  முறை அன்வார்  கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

65 வயதான அன்வார் இப்ராகிம் 1998ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் எதிர்கட்சி அரசியலோடு தொடர்பு வைத்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றார்.

அவருக்கு எதிராக  ஊழல் குற்றசாட்டு, ஓரின புணர்ச்சி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போதும், பல சர்ச்சைகள் அவருக்கு எதிராக எழுந்த போதும் அதையெல்லாம் தாண்டி, தனக்கே உரிய அஞ்சாமல் போராடும் குணத்தால் எல்லாப் பிரச்சினைகளையும்  எதிர்கொண்டு 13ஆவது பொதுத்தேர்தலில் களம் இறங்கியுள்ளார்.