Home 13வது பொதுத் தேர்தல் பகாங் மாநில சட்டமன்றம் ஏப்ரல் 8 இல் தானாக கலையும்!

பகாங் மாநில சட்டமன்றம் ஏப்ரல் 8 இல் தானாக கலையும்!

554
0
SHARE
Ad

Pahang-State-location-map-sliderகுவாந்தான், மார்ச் 29- பகாங் மாநில சட்டமன்றத்தின் தவணைக் காலம் வருகிற 8ஆம் தேதியோடு நிறைவடையும் நிலையில் அம்மாநில பேச்சாளர் டத்தோஸ்ரீ  வான் முகமட் ரசாலி வான் முஹாசின் அது பற்றிக் கூறியதாவது:-

“நாடாளுமன்றம் கலைக்கப்படுவது நடக்க வில்லையென்றால் பகாங் மாநிலத்தின் சட்டமன்றம் 8ஆம் தேதி ஏப்ரலில் தானாக கலையும். கடந்த 7ஆம் தேதி ஏப்ரல் 2008 ஆம் ஆண்டில் பொதுத்தேர்தலில், முதல் கூட்டத்தில் பேச்சாளரை தேர்ந்தெடுத்து உறுதிமொழியும்  செய்யப்பட்டது” என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

பகாங் மாநிலத்தின் சட்டமன்றம் கலைந்தவுடன், சட்டமுறைப்படி வான் முகமட் ரசாலி பாகாங் தேர்தல் வாரியத்திடம் அறிவிப்பார்.