Home நாடு பெலாங்காய் இடைத் தேர்தல் : தேசிய முன்னணி அபார வெற்றி

பெலாங்காய் இடைத் தேர்தல் : தேசிய முன்னணி அபார வெற்றி

382
0
SHARE
Ad

பெந்தோங் : இன்று சனிக்கிழமை (அக்டோபர் 7) நடைபெற்ற பெலாங்காய் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ அமிசார் அபு அடாம்  அபார வெற்றி பெற்றார்.

மொத்த வாக்குகளில் 62 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றார். கடந்த 2022 சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி 57.7 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றது. இதன் மூலம், ஒற்றுமை அரசாங்கம் அடிப்படையில் பக்காத்தான் ஹாரப்பான் ஆதரவு வாக்குகள் கூடுதலாக தேசிய முன்னணிக்குக் கிடைத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இந்த இடைத் தேர்தலில் இன்று மாலை 4 மணி நிலவரப்படி 69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

பெலாங்காய் சட்டமன்றம் பெந்தோங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 4 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

பெந்தோங் அம்னோ தொகுதியின் செயலவை உறுப்பினரான டத்தோ அமிசார் அபு அடாம் தேசிய முன்னணி வேட்பாளராக இந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து பாஸ் கட்சியைச் சேர்ந்த காசிம் சாமாட் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராகப் போட்டியிட்டார். இவர் பெந்தோங் பாஸ் தொகுதியின் துணைத் தலைவருமாவார். ஹாஸ்லி ஹெல்மி டிஎம் சுல்ஹாஸ்லி சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி எல்மினா, ஷா ஆலாம் என்ற இடத்தில் நிகழ்ந்த சிறுரக விமான விபத்தில் பெலாங்காய் சட்டமன்ற உறுப்பினர் ஜோஹாரி ஹாருண் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த இடைத் தேர்தல் நடைபெற்றது. பெந்தோங் அம்னோ தொகுதி தலைவராகவும்  ஜோஹாரி செயலாற்றி வந்தார்.

பெலாங்காய் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 15-வது பொதுத் தேர்தலில் ஜோஹாரி 4,048 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.