Home கலை உலகம் விஜயகாந்துடன் அன்று நடிக்க மறுத்த ராதா! ஆனால் அவரின் மகனுக்கு ஜோடியாக ராதா மகள்?

விஜயகாந்துடன் அன்று நடிக்க மறுத்த ராதா! ஆனால் அவரின் மகனுக்கு ஜோடியாக ராதா மகள்?

1307
0
SHARE
Ad

thulasiசென்னை, மார்ச் 30- இதுதாங்க காலத்தின் கோலம்ங்கிறது. தூரத்து இடிமுழக்கத்தில் அறிமுகமான விஜயகாந்த், தோற்றத்தில் க‌றுப்பாக  இருந்ததால் நாங்க அவருகூட நடிக்க மாட்டோம் என்று விலகிச் சென்ற நடிகைகளில் ராதா, அம்பிகா சகோத‌ரிகளும் அடக்கம்.

தனது சண்டைக் காட்சிகளால் பின்னர் பிரபலமாகி தன்னை ஒதுக்கியவர்களே தேடி வந்து நடிக்கிற நிலைமைக்கு விஜயகாந்த் வளர்ந்தது வரலாறு. ராதா, அம்பிகாவும்கூட அவருடன் பின்னர் ஜோடி சேர்ந்தார்கள்.

இதெல்லாம் தெ‌ரிந்த விஷயம்தானே. அப்புறம் என்ன விசேஷம்?

#TamilSchoolmychoice

விஜயகாந்தின் இரண்டாவது மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது ராதாவின் இரண்டாவது மகள் துளசிதானாம்.

கடல் படத்தின் போது தான் நடிக்கும் வாய்ப்பு துளசிக்கு கிடைத்தது. படம் வெளிவந்த பிறகு யாரும் அவரை அடுத்த படத்தில் நடிக்க கேட்கலையாம். இப்படியொரு சூழலில் விஜயகாந்தின் மகனுக்கு ஜோடியாக நடிக்க கேட்க மறுபேச்சில்லாமல் ஒத்துக் கொண்டதாக கேள்வி.

இவர்கள் இணையும் படத்தை இயக்கப் போகிறவர் என்று பல இயக்குநர்களின் பெயர்கள் அடிபடுகிறது. அதில் ஒன்று சிங்கம் பட இயக்குநர் ஹ‌ரி.