Home கலை உலகம் விஜயகாந்த் மகன் ஜோடியாக துளசி!

விஜயகாந்த் மகன் ஜோடியாக துளசி!

748
0
SHARE
Ad

thulasiசென்னை, மார்ச் 28- விஜயகாந்த் தன்னுடைய மகன் பிரபாகரனை சினிமாவில் அறிமுகப்படுத்த பல இயக்குனர்களிடம் கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், இயக்குனர் ஹரியிடம் கதைகேட்ட விஜயகாந்த், அந்த கதை பிடித்துவிட்டதாகவும் தன் மகனை அவரது இயக்கத்தில் அறிமுகப்படுத்தப் போவதாகவும் கூறப்படுகிறது.

ஹரி தற்போது சூர்யா நடிக்கும் சிங்கம்-2 படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறார். இந்த படத்தின் வேலைகள் முடிந்ததும் பிரபாகரன் நடிக்கும் படத்தின் வேலைகளில் தீவிரமாக களமிறங்குவார் என கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இப்படத்தில் பிரபாகரனுக்கு ஜோடியாக ‘கடல்’ படத்தில் அறிமுகமான முன்னாள் நடிகை ராதாவின் இளைய மகள் துளசி ஒப்பந்தமாகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

1980-களில் விஜயகாந்த் – ராதா ஜோடி பல வெற்றிகரமான படங்களை தந்துள்ளது. அந்த வரிசையில் இந்த ஜோடியும் அந்த வெற்றியை குவிக்கும் என நம்பப்படுகிறது.