ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இந்தப் படத்தில் இருவருக்கும் இரண்டு வேடங்கள், அதிலொன்று ஆதிவாசி கேரக்டர் என செய்தி கசிந்துள்ளது. ஆதிவாசி கதாபாத்திரத்தை ஜார்ஜியாவில் படமாக்கியிருப்பதாகவும் தகவல்.
ஜார்ஜியாவில் எடுக்க முடியாமல் போன சில காட்சிகளையும், பாடல் காட்சி ஒன்றையும் உஸ்பெஸ்கிஸ்தானில் எடுப்பதாக செல்வராகவனின் திட்டம். விசா பிரச்சனை காரணமாக சென்னை புறநகரில் அரங்கம் அமைத்து தற்போது பாடல் காட்சியை எடுத்து வருகிறார். பின்னணிக் குரல் கொடுக்கும் பணிகளையும் அங்கேயே முடித்துக் கொள்வார் என்கிறார்கள் படக் குழுவினர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை பிவிபி சினிமா தயாரிக்கிறது.