Home அரசியல் ஹிண்ட்ராப், நஜிப் இடையிலான சந்திப்பு – பி.கே.ஆரை பாதிக்காது – சுரேந்திரன்

ஹிண்ட்ராப், நஜிப் இடையிலான சந்திப்பு – பி.கே.ஆரை பாதிக்காது – சுரேந்திரன்

667
0
SHARE
Ad

images (1)கோலாலம்பூர்,மார்ச் 29 – எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஹிண்ட்ராப் இயக்கம் தேசிய முன்னணியின் பக்கம் நின்றால் கூட, பி.கே.ஆர் கட்சிக்கு இந்திய சமூகத்தினரிடையே பெருகி வரும் ஆதரவு குறையப்போவதில்லை என்று அக்கட்சியின் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி, பிரதமர் நஜிப் துன் ரசாக்கை சந்தித்தது குறித்து சுரேந்திரன் கருத்து கூறுகையில்,

“எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு சாதகமாக ஹிண்ட்ராப் செயல்பட்டால் கூட, இந்திய மக்கள் பி.கே.ஆருக்கு தொடர்ந்து தங்களது ஆதரவை வழங்குவார்கள். காரணம் இந்திய மக்களின் நலனுக்காக பி.கே.ஆர் தொடர்ந்து போராடி வருகிறது.மேலும் ஹிண்ட்ராப் விடுத்த ஐந்தாண்டுத் திட்ட கோரிக்கையை ஏற்கனவே ‘கொள்கை ரீதியாக’ பி.கே.ஆர் ஏற்றுக்கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மீண்டும் பி.கே.ஆர் மற்றும் ஹிண்ட்ராப்புக்கிடையே பேச்சுவார்த்தைகள் நிகழ வாய்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்தியர்களின் வளர்ச்சிக்கு பாடுபடும் எந்த ஒரு இயக்கத்தையும் ஆதரிக்க பி.கே.ஆர் தயாராக இருப்பதாக சுரேந்திரன் தெரிவித்தார்.