Home உலகம் பன்னீர் செல்வத்தின் வாதத்தை ஏற்க, சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒப்புதல்!

பன்னீர் செல்வத்தின் வாதத்தை ஏற்க, சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒப்புதல்!

896
0
SHARE
Ad

சிங்கப்பூர்: போதைப் பொருள் கடத்தலுக்காக சிங்கப்பூர் சிறைச்சாலையில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் மலேசியரான பன்னீர் செல்வம் பரந்தாமனின் தூக்குத் தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மலேசிய வழக்கறிஞரும் பிகேஆர் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான என்.சுரேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாளை வெள்ளிக்கிழமை மே 24-ஆம் தேதி பன்னீருக்கான தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்த வேளையில், அவர் சிறையிலிருந்து சிங்கை மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்திருக்கும் மேல்முறையீடு இன்று விசாரணைக்கு வந்தது.

தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என பன்னீர் செல்வம் கருணை மனு ஒன்றையும் சிங்கை அதிபர் ஹலிமா யாகோப்பிற்கு அனுப்பி வைத்திருந்தார். இதனிடையே, தன்னை தற்காத்து விவாதிக்க பன்னீர் செல்வத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி உட்லண்ட்ஸ் குடிநுழைவுத் துறை வளாகத்தில் 51.84 கிராம் எடையுள்ள டைமோர்பின் என்ற போதைப் பொருளைக் கடத்திய குற்றத்திற்காக பன்னீர் செல்வம் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டார்.

சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த முடிவைத் தொடர்ந்து நாளை தூக்கிலிடப்படவிருந்த பன்னீர் செல்வத்தின் தூக்குத் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.