Home இந்தியா ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று பதவி விலகுகிறார்!

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று பதவி விலகுகிறார்!

922
0
SHARE
Ad

ஹைட்ராபாட்: ஆந்திராவில் சட்டப்பேரவை, மக்களவை இரு தேர்தலிகளிலும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று வியாழக்க்கிழமை பதவி விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஆந்திர பிரதேசத்தில் சட்டமன்றம், நாடாளுமன்றம் இரண்டிற்கும் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதனால் பெரிய அளவிலான ஆட்சி மாற்றம் எதிர்பார்ப்பு ஆந்திராவில் நிலவியது. ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்திற்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அதி தீவிரமான பிரச்சாரம் செய்தது. இதனால், இம்முறை ஆந்திர சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் எதிர்பார்ப்பு அதிகரித்தது

இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பின்தங்கியுள்ளது. இதனால், தற்போது முதல்வர் பதவியிலிருந்து சந்திரபாபு நாயுடு இன்று விலகுவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இன்று மாலைக்குள் இது பற்றிய முழுமையான செய்தி சந்திரபாபு நாயுடு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.