Home இந்தியா குஜராத் : 26 தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக

குஜராத் : 26 தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக

932
0
SHARE
Ad

அகமதாபாத் – பாஜகவின் பிரதமராகவும், அந்தக் கட்சியின் தலைவராகவும் முறையே வீற்றிருக்கும் நரேந்திர மோடி, அமித் ஷா இருவருமே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், பாரம்பரியமாக அம்மாநிலத்தில் மோடிக்கு இருக்கும் செல்வாக்கினாலும், அம்மாநிலத்தின் 26 நாடாளுமன்றத் தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றியிருக்கிறது.

மற்ற கட்சிகள் ஒரு தொகுதியைக் கூட வெல்ல முடியவில்லை.

கடந்த முறை இங்குள்ள காந்தி நகர் தொகுதியிலும், உத்தரப் பிரதேசத்திலுள்ள வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்ட நரேந்திர மோடி இந்த முறை வாரணாசி தொகுதியில் மட்டும் போட்டியிட்டார்.

#TamilSchoolmychoice

மோடிக்குப் பதிலாக காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் அமித் ஷா அங்கு 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெரும்பான்மையில் முன்னணி வகிக்கிறார்.