Home இந்தியா குஜராத், மகராஷ்டிரா மாநிலங்களைத் தாக்கிய புயல் – 6 பேர் மரணம்

குஜராத், மகராஷ்டிரா மாநிலங்களைத் தாக்கிய புயல் – 6 பேர் மரணம்

759
0
SHARE
Ad

மும்பை : அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள தாக் டே புயல் (Tauktae) கரையைக் கடந்த வேளையில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக கடுமையான சேதங்களை இந்தியாவின் குஜராத், மகராஷ்டிரா மாநிலங்களில் ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மகராஷ்டிரா மாநிலத்தில் இதுவரையில் 6 பேர் மரணமடைந்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் விமான நிலையம் நாளை செவ்வாய்க்கிழமை வரை மூடப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் இந்திய இராணுவமும் அவசரகாலப் பணிகளுக்காக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.