Home கலை உலகம் தமிழ்நாடு கொரொனா நிவாரண நிதிக்கு ரஜினி 50 இலட்சம் ரூபாய் வழங்கினார்

தமிழ்நாடு கொரொனா நிவாரண நிதிக்கு ரஜினி 50 இலட்சம் ரூபாய் வழங்கினார்

601
0
SHARE
Ad

சென்னை : கொரொனா பரவலுக்கு எதிராக தமிழ்நாடு அரசாங்கம் நடத்தி வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தமிழ் நாடு அரசாங்கம் இந்தப் பணத்தை கொரொனாவுக்கு எதிரான போராட்டத்திற்காகப் பயன்படுத்தும் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் உலகத் தமிழர்களும் உயிர்காக்க நிதி வழங்க வேண்டுமென ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பல சினிமா பிரபலங்களும், தொழிலதிபர்களும் தொடர்ந்து ஸ்டாலினைச் சந்தித்து நிதி வழங்கி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

நடிகர் ரஜினிகாந்த் தனது சார்பில் 50 இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

ஏற்கனவே, நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர். நடிகர் அஜித் 25 இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.