கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்பான பல வழக்குகளில் அவரைப் பிரதிநிதிக்கும் பிரபல வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா 9.41 மில்லியன் ரிங்கிட் வருமான வரி பாக்கியைச் செலுத்த வேண்டும் என மலேசிய அரசாங்கம் அவர் மீது வழக்கு தொடுத்துள்ளது.
உள்நாட்டு வருமானவரி இலாகா மலேசிய அரசாங்கத்தின் சார்பில் இந்த வழக்கை நீதிமன்றத்தில் தொடுத்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக அவர் செலுத்தாக வருமான வரி பாக்கிக்காக இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த மே 6-ஆம் தேதி இந்த வழக்கு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஷாபி அப்துல்லா மொத்தம் செலுத்த வேண்டிய வருமானவரி பாக்கித்தொகை 9,414,708.32 என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இதற்கான வழக்கு ஆவணங்கள் தங்களின் மீது இதுவரையில் சார்வு செய்யப்படவில்லை என ஷாபி அப்துல்லா சார்பில் அவரின் மகனுமான வழக்கறிஞர் முகமட் பார்ஹான் ஷாபி அப்துல்லா தெரிவித்துள்ளார்.