Home நாடு நஜிப் சிறையில் முனைவர் பட்டத்துக்கான படிப்பில் ஈடுபட்டுள்ளார்

நஜிப் சிறையில் முனைவர் பட்டத்துக்கான படிப்பில் ஈடுபட்டுள்ளார்

406
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கில் 12 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சிறையிலிருந்தவாறே, பிஎச்.டி என்னும் முனைவர் (டாக்டர்) பட்டத்திற்கான படிப்பை நிறைவு செய்ய, அதற்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்தத் தகவலை அவரின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா தெரிவித்தார். கெலுவார் செகெஜாப் என்ற தலைப்பில் முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடினும், முன்னாள் அம்னோ தகவல் தொடர்புக் குழுத்தலைவர் ஷாரில் ஹாம்டானும் யூடியூப் தளத்தில் நடத்தி வரும் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்த ஷாபி அப்துல்லா, நஜிப் முனைவர் பட்டத்திற்குப் படித்து வரும் தகவலை வெளியிட்டார்.

இதே நிகழ்ச்சியில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஷாபி அப்துல்லா நஜிப் சுமார் 10 மாதங்களுக்கு முன்னரே, மாமன்னரிடம் அரச மன்னிப்புக்கான மேல்முறையீட்டை சமர்ப்பித்தார் என்றும் அதற்கு இன்னும் பதில் கிடைக்காத காரணத்தால் நினைவூட்டும் கடிதம் ஒன்றை அடுத்த சில நாட்களுக்குள் மாமன்னரிடம் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார.