Home நாடு அந்நியத் தொழிலாளர்கள் தடை – அடுத்தாண்டு வரை தொடரும் – சிவகுமார் அறிவிப்பு

அந்நியத் தொழிலாளர்கள் தடை – அடுத்தாண்டு வரை தொடரும் – சிவகுமார் அறிவிப்பு

413
0
SHARE
Ad
வ.சிவகுமார்

கோலாலம்பூர் : புதிதாக அந்நியத் தொழிலாளர்களை நாட்டின் தொழில் துறைகளில் அனுமதிப்பதற்கான தடை அடுத்தாண்டு வரை தொடரும் என மனித வள அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை இதுகுறித்து இன்னும் முடிவெடுக்காததால் இந்தத் தடை தொடர்வதாக அவர் நேற்று வியாழக்கிழமை (டிசம்பர் 7) நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.

12-வது மலேசியத் திட்டத்தின் அடிப்படையில் நாட்டில் அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2025-ஆம் ஆண்டு வரை 2.5 மில்லியனாக நிலைத்திருக்க வேண்டுமென அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது.

#TamilSchoolmychoice

எனினும் தற்போதைய அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை இந்த 2.5 மில்லியனைத் தாண்டிவிட்டது. அதற்குக் காரணம், நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கும் கூடுதலாகத் தங்கியிருந்த அந்நியத் தொழிலாளர்களுக்கான மறுவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மேலும் கூடுதலான அந்நியத் தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்களின் எண்ணிக்கை 2.7 மில்லியனைத் தாண்டிவிட்டது எனவும் சிவகுமார் குறிப்பிட்டார்.

இன்னொரு விதத்தில் நாட்டிலுள்ள அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, இந்திய சமூகத்தின் மக்கள் தொகையான 2 மில்லியனையும் விட கூடுதலாக அதிகரித்துள்ளது என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.