Home நாடு ராகுல் காந்தி, மஇகா தலைமையகத்திற்கு வருகை

ராகுல் காந்தி, மஇகா தலைமையகத்திற்கு வருகை

378
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மலேசியாவுக்கு வருகை தந்து சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

அடுத்த ஆண்டு இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அயல்நாடுகளுக்கு வருகை தந்து வெளிநாடுகளில் வாழும் இந்திய சமூகத்தின் ஆதரவைத் திரட்டும் நோக்கத்துடன் ராகுல் காந்தி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் எனக் கருதப்படுகின்றது.

இதற்கு முன்னர் 9 மார்ச் 2018-ஆம் நாள் கோலாலம்பூருக்கு வருகை தந்தபோதும் ராகுல் காந்தி மார்ச் 10-ஆம் தேதி மஇகா தலைமையகத்திற்கு வருகை தந்தார். பல பொது நிகழ்ச்சிகளிலும் கோலாலம்பூர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

கடந்த 10 மார்ச் 2018-இல் மஇகா தலைமையகத்திற்கு ராகுல் காந்தி வருகை தந்தபோது, அமரர் துன் சாமிவேலுவுடன்…
#TamilSchoolmychoice

எதிர்வரும் சனிக்கிழமை டிசம்பர் 9-ஆம் தேதி புத்ரா ஜெயாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைச் சந்திக்கிறார் ராகுல் காந்தி.

டிசம்பர் 2019-இல் புதுடில்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்த அன்வார்

அதன் பின்னர், மாலை 5.00 மணிக்கு மஇகா தலைமையகத்திற்கு வருகை தருகிறார். அங்கு மஇகா மத்திய செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தும் ராகுல் அதன் பின்னர் மஇகா மண்டபத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் பொதுமக்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். இந்தியா மலேசியா இடையிலான அரச தந்திர உறவுகள், இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்புகள், கலாச்சாரப் பரிமாற்றங்கள் குறித்து ராகுல் காந்தி உரை நிகழ்த்துவார்.

சிறப்புரைக்குப் பின்னர் வருகையாளர்களுடனான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் அங்கத்தில் ராகுல் பங்கு பெறுவார்.

இந்த நிகழ்ச்சியில் மஇகா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

மஇகாவும், கோலாலம்பூர், புத்ரா ஜெயா, இந்திய வர்த்தக மன்றத்தினரும் ராகுல் காந்தி வருகை தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.