Home நாடு கோலாலம்பூரில் ராகுல் காந்தி!

கோலாலம்பூரில் ராகுல் காந்தி!

973
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசிய வருகை மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்றிரவு கோலாலம்பூர் வந்தடைந்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம்

இன்று சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ் வளாகத்தில் உள்ள பேங்க் ராயாட் வங்கிக் கட்டட மண்டபத்தில் நடைபெற்ற இந்தியர் இளைஞர் கலந்துரையாடலில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

இந்தக் கலந்துரையாடலில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் கலந்து கொண்டு உரையாற்றினார்.