Home நாடு கட்சியின் பதிவை இரத்து செய்வோம் – பெர்சாத்துவுக்கு ஆர்ஓஎஸ் எச்சரிக்கை!

கட்சியின் பதிவை இரத்து செய்வோம் – பெர்சாத்துவுக்கு ஆர்ஓஎஸ் எச்சரிக்கை!

688
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பெர்சாத்து கட்சிப் பதிவு தொடர்பாக தாங்கள் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு இன்னும் 1 மாதத்தில் பதிலளிக்கவில்லையென்றால், கட்சியின் பதிவு இரத்து செய்யப்பட்டு தேர்தலில் போட்டியிடமுடியாத நிலை ஏற்படும் என சங்கங்களின் பதிவிலாகா (ஆர்.ஓ.எஸ்) பெர்சாத்து கட்சிக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இது குறித்து ஆர்ஓஎஸ் பொது இயக்குநர் சுராயாதி இப்ராகிம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பெர்சாத்து பொதுச்செயலாளர் ஷாருடின் முகமட் சாலேவுக்கு கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஆர்ஓஎஸ் அறிக்கை அனுப்பி விளக்கம் கேட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், கிளை மற்றும் தொகுதி அளவிலான பெர்சாத்து கட்சியின் கூட்ட நிமிடங்களின் பதிவு, நிதி ஆவணங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்குமாறு பெர்சாத்து கட்சி ஆர்ஓஎஸ் கேட்டிருப்பதாகவும் சுராயாதி இப்ராகிம் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

சங்கங்களின் பதிவிலாகா சட்டம் 1996-ன் படி, 7 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும், பின்னர் அது 30 நாட்களாக அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் சுராயாதி தெரிவித்திருக்கிறார்.

30 நாட்களுக்குள் பெர்சாத்து கட்சி பதிலளிக்கவில்லையென்றால், சட்டப்பிரிவு 14 (2), சட்டப்பிரிவு 14(5)-ன் கீழ் பெர்சாத்துவின் பதிவு இரத்து செய்யப்படும் என்றும் சுராயாதி குறிப்பிட்டிருக்கிறார்.