Home கலை உலகம் இர்பானின் நோய் குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – மனைவி வேண்டுகோள்!

இர்பானின் நோய் குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – மனைவி வேண்டுகோள்!

1100
0
SHARE
Ad

புதுடெல்லி – ஜுராசிக் வேர்ல்ட் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகர் இர்பான் கான்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு திடீர் உடலக்குறைவு ஏற்பட்டது.

இதனைடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு அரிய வகை வியாதி தாக்கியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இதனிடையே, தனக்கு மூளையில் கட்டி என சில ஊடகங்கங்களில் வந்திருக்கும் செய்தியை மறுத்திருக்கும் இர்பான் கான், தனக்கு வந்திருப்பது அரிய வியாதி என்றும், அது என்னவென்று பரிசோதனை முடிவுகளில் தான் தெரியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதுவரை யாரும் வதந்திகளைப் பரப்பவோ, நம்பவோ வேண்டாம் என்றும், இன்னும் 10 நாட்களில் தானே அறிவிப்பதாகவும் இர்பான் தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை இர்பானின் வியாதி குறித்து மனம் திறந்திருக்கும் அவரது மனைவி சுதாபா சிக்தர், தனது கணவர் ஒரு வீரர் என்றும், அவரது இந்த மோசமான சூழ்நிலையில், அவருக்கு பக்கபலமாக தான் இருந்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இர்பானுக்கு வந்திருக்கும் அரிய வகை வியாதி குறித்து தயவு செய்து யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.