Home நாடு மஇகா தலைமையகத்திற்கு ராகுல் காந்தி வருகை

மஇகா தலைமையகத்திற்கு ராகுல் காந்தி வருகை

1712
0
SHARE
Ad
ராகுல் காந்தியுடன் சாமிவேலு, வடிவேலு, திருநாவுக்கரசர், வேள்பாரி

கோலாலம்பூர் – மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மஇகா தலைமையகத்திற்கு வருகை தந்தார்.

மஇகா தலைமையகக் கட்டடத்தில் உள்ள நேதாஜி மண்டபத்திற்கு வருகை தந்த ராகுல் காந்திக்கு மஇகா தலைவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் சாமிவேலு, முன்னாள் மஇகா தலைமைச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற மேலவையின் தலைவருமான டான்ஸ்ரீ ஜி.வடிவேலு, மஇகா தேசியப் பொருளாளர் டத்தோஸ்ரீ வேள்பாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

ராகுல் காந்தியோடு தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் வருகை தந்திருக்கிறார்.