Home நாடு “பெர்சாத்து கட்சியை இரத்து செய்து பாருங்கள்! மாற்று திட்டம் வைத்திருக்கிறோம்”

“பெர்சாத்து கட்சியை இரத்து செய்து பாருங்கள்! மாற்று திட்டம் வைத்திருக்கிறோம்”

813
0
SHARE
Ad

தானா மேரா – “பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து கட்சியின் பதிவை இரத்து செய்யும் சங்கப் பதிவிலாகாவின் எச்சரிக்கைக் கடிதத்திற்காக நாங்கள் அச்சப்பட மாட்டோம். மாறாக பெர்சாத்து கட்சியின் பதிவை இரத்து செய்து பாருங்கள். அல்லது பக்காத்தானுக்கு அனுமதியை மறுத்துப் பாருங்கள். அதற்குரிய மாற்று திட்டம் கைவசம் வைத்திருக்கிறோம்” என பக்காத்தான் தலைவர் துன் மகாதீர் இன்று சவால் விடுத்தார்.

இன்று கிளந்தான் மாநிலத்தின் தானா மேரா நகருக்கு வருகை தந்து, பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.