Home நாடு டத்தோஸ்ரீ சரவணனின் செயலாளர் டத்தோ சூர்ய குமார் காலமானார்

டத்தோஸ்ரீ சரவணனின் செயலாளர் டத்தோ சூர்ய குமார் காலமானார்

615
0
SHARE
Ad

தாப்பா : மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனின் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றி வந்த டத்தோ சூர்யகுமார் இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 7) காலமானார்.

சரவணன் துணையமைச்சர், அமைச்சர் பதவி வகித்த காலங்களில் அவரின் அமைச்சு அலுவலகத்தில் செயலாளராகப் பணிபுரிந்த சூர்யா, சரவணன் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் தாப்பா தொகுதி விவகாரங்களைப் பிரத்தியேகமாகக் கவனித்து வந்தார்.

சூர்யாவின் மறைவு குறித்து தனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்த சவரணன்,   “சூர்யாவின் மறைவு செய்தி கேட்டு நான் மனமுடைந்து போய்விட்டேன். என் செயலாளராக, 2008-இல் நான் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராக இருந்த காலம் தொட்டு என்னிடம் பணியாற்றிவர் சூர்யா. பின்னர் நான் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சராக 2013-இல் நியமிக்கப்பட்டபோதும், 2020 முதல் 2022 வரை மனிதவள அமைச்சராகப் பதவி வகித்தபோதும் என்னிடம் பணியாற்றினார் சூர்யா” எனக் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்தவர் சூர்யா. அவரின் பரிவான சேவைகளும், கனிவான அணுகுமுறையும் அனைவராலும் எப்போதும் மறக்காமல் நினைவுகூரப்படும். எங்களுக்கு எல்லாமுமாக அவர் இருந்தார். அவரின் மறைவும் இழப்பும் ஈடு செய்ய முடியாததாகும். அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள்” என்றும் சரவணன் உருக்கத்துடன் தன் முகநூலில் பதிவிட்டார்.