Home நாடு சிவகுமார் தீபாவளி வாழ்த்து : “நம் சமூகத்தின் பன்முகத் தன்மை அழகான நினைவூட்டல்”

சிவகுமார் தீபாவளி வாழ்த்து : “நம் சமூகத்தின் பன்முகத் தன்மை அழகான நினைவூட்டல்”

381
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று தீபத் திருநாளாம் தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் தனது தீபாவளி நல்வாழ்த்துகளை மனித வள அமைச்சரும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வ.சிவகுமார் தெரிவித்துக் கொண்டார்.

“தீபாவளி என்பது சமூகத்தின் பன்முகத்தன்மையில் வெளிப்படும் நல்லிணக்கத்தின் அழகான நினைவூட்டலாகும். தீபாவளி நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், அமைதியையும் தரட்டும்” என அவர் தன் தீபாவளி செய்தியில் குறிப்பிட்டார்.