Home நாடு “தீபாவளி வாழ்வினைச் செழுமையாக்கட்டும்” – சரவணன் வாழ்த்து

“தீபாவளி வாழ்வினைச் செழுமையாக்கட்டும்” – சரவணன் வாழ்த்து

419
0
SHARE
Ad

ம.இ.கா தேசியத் துணைத்தலைவர்
மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின்
தீபாவளி வாழ்த்துச் செய்தி

தீபத்திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலேசியர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இருள் நீங்கி ஒளிபிறக்கும் இந்நன்னாளில் அனைவரும் மகிழ்ச்சியாக, உறவினரோடும், நண்பர்களோடும் இணைந்து தீபாவளியைக் கொண்டாடுவோம்.

பண்டிகைகள், கொண்டாட்டங்களின் தத்துவமே பண்பாடுகளைப் பேணிக்காத்து ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக இருப்பதே. எண்ணெய் தேய்த்துக் குளித்தல், புத்தாடை அணிதல், பட்டாசு வெடித்தல், பெரியோரை வணங்குதல் என ஒவ்வொரு செயலுக்கும் ஆழந்த அர்த்தங்கள் உண்டு. அவற்றை நாமும் தெரிந்து கொண்டு பிறருக்கும் புரியும்படி கொண்டாட வேண்டும். இந்த கொண்டாட்டத்தில் தீபத்திருநாள் பெருமையையும் பிறர் உணரச் செய்வோம்.

பண்டிகை என்றாலே குதூகலம், கொண்டாட்டம், மகிழ்ச்சி, ஆனந்தம் என்று அனைத்தும் நிறைந்ததாக இருக்கும். இயந்திரமான இந்த வாழ்க்கையில் இப்படி விழாக்களும், கொண்டாட்டங்களும் வரும் பொழுதுதான் குடும்ப உறவுகளுடையே ஒற்றுமை, புரிந்துணர்வு, விட்டுக் கொடுத்தல் போன்ற உணர்வுகளைக் காண முடிகிறது.
பண்டிகைகள் நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

தனி மனித, சமூகத்தின் நல்வாழ்வைக் கருதி மிகுந்த சிந்தனையுடன் முன்னோர்கள் பண்டிகைகளை ஏற்படுத்தியுள்ளனர். மனித நேயத்தையும், ஒருமைப்பாட்டையும் நமது வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வதற்கு பண்டிகைகள் துணைபுரிகின்றன.

தீபத்திருநாளில் வாழ்வின் இருள் நீங்கி ஒளி வீசும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. நன்மையின் வெற்றி தீமையின் அழிவு என்பதே இதன் தத்துவமாகும். இது வெறும் பண்டிகை மட்டுமல்லாது, வாழ்வினைச் செழுமையாக்கும் அழகிய தீபத் திருநாளாகவும் அமைய வேண்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.