Home நாடு டத்தோஸ்ரீ சுந்தரராஜூவின் தீபாவளி வாழ்த்து -“புதிய வளமையான, செழுமையான தொடக்கங்கள் நிகழட்டும்”

டத்தோஸ்ரீ சுந்தரராஜூவின் தீபாவளி வாழ்த்து -“புதிய வளமையான, செழுமையான தொடக்கங்கள் நிகழட்டும்”

311
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு இன்று தீபாவளி கொண்டாடும் அனைத்துப் பெருமக்களுக்கும் குறிப்பாக பினாங்கு வாழ் இந்துப் பெருமக்களுக்கும் தன் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

“இந்த ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டங்கள் மக்களின் இல்லங்களில் உற்சாகத்தைக் கொண்டுவரவும் மக்கள் மனங்களில் அன்பை விதைக்கவும் அனைவரின் வாழ்விலும் நிறைந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தவும் வாழ்த்துகிறேன்” என அவர் தன் தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

“சூழ்ந்திருக்கும் இருளை நீக்கும் வகையில் வெளிச்சம் பரவட்டும். புதிய வளமையான, செழுமையான தொடக்கங்கள் நிகழட்டும். உங்கள் அனைவரின் குடும்பங்களிலும் இந்தத் தீபாவளித் திருநாளில் நல்லாசிகள் நிறையட்டும்” என்றும் அவர் தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice