Home உலகம் சவுதி அரேபியா இஸ்லாமிய நாடுகள் மாநாட்டில் அன்வார் இப்ராகிம்

சவுதி அரேபியா இஸ்லாமிய நாடுகள் மாநாட்டில் அன்வார் இப்ராகிம்

503
0
SHARE
Ad

ரியாத் : இஸ்ரேல் – பாலஸ்தீன போரைத் தொடர்ந்து அது குறித்து விவாதிக்க இஸ்லாமிய நாடுகளின் மாநாட்டை சவுதி அரேபியா நடத்தியது. அந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் அன்வார் இப்ராகிம் சவுதி அரேபியாவின் ரியாத் நகர் சென்றுள்ளார்.

மாநாட்டின் இடைவேளையில் மற்ற இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து அன்வார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஈரானிய அதிபர் சையத் இப்ராகிம் ராய்சியுடன் அன்வார் பேச்சுவார்த்தை நடத்தியபோது…

அன்வாருடன் அவரின் துணைவியார் வான் அசிசாவும், வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் சாம்ரி அப்துல் காதர், தொடர்பு இலக்கவியல் அமைச்சர் பாஹ்மி பாட்சிலும் உடன் சென்றுள்ளனர்.

#TamilSchoolmychoice