Home நாடு நஜிப்பின் எஞ்சிய சிறைவாசம், வீட்டுக் காவலில்…கடிதம் உண்மைதான் – சாஹிட் சத்தியப் பிரமாணம்!

நஜிப்பின் எஞ்சிய சிறைவாசம், வீட்டுக் காவலில்…கடிதம் உண்மைதான் – சாஹிட் சத்தியப் பிரமாணம்!

354
0
SHARE
Ad

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்புக்கான ஆவணத்தில் அவரின் தண்டனை குறைக்கப்பட்டதோடு, எஞ்சிய சிறைவாசத்தை அவர் வீட்டுக் காவலில் கழிக்க உத்தரவிடப்பட்டது என்றும் அதன் தொடர்பான ஆவணங்களைத் தான் பார்த்ததாகவும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி ஏப்ரல் 9 தேதியிட்ட சத்தியப் பிரமாணம் ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.

கடந்த ஜனவரி 30-ஆம் தேதி தனது காஜாங், கண்ட்ரி ஹைட்ஸ் இல்லத்தில் நடைபெற்ற ஒரு சந்திப்புக் கூட்டத்தில் அனைத்துலக வாணிப, முதலீட்டுக்கான அமைச்சர் தெங்கு சாப்ருல் அப்துல் அசிஸ், ஜனவரி 29 தேதியிட்ட அத்தகைய ஓர் இணைப்பு உத்தரவு இருப்பது உண்மைதான் எனத் தன்னிடம் தெரிவித்தார் என்றும் சாஹிட் குறிப்பிட்டார். அந்த அரச மன்னிப்பு கடிதத்தை தான் கண்ணுற்றதாகவும் சாஹிட் தெரிவித்தார்.

இதே ஆவணத்தை பகாங் மாநில மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயிலும் பார்த்ததாக தன்னிடம் கூறியிருப்பதாக சாஹிட் தன் சத்தியப் பிரமாண ஆவணத்தில் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

நஜிப்புக்கான அரச மன்னிப்பு தொடர்பில் நஜிப்பின் வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா வழக்கொன்றைத் தொடுத்துள்ளார். நஜிப்புக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பின்படி, தனது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அவர் கழிக்க வேண்டும் என்பதுதான் அந்த வழக்கின் சாராம்சம்.

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட 12 ஆண்டு சிறைவாசம் அரச மன்னிப்பின்படி6 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. 210 மில்லியன் ரிங்கிட் அபராதம்50 மில்லியனாகக் குறைக்கப்பட்டது.