Home இந்தியா நரேந்திர மோடி, தென்னிந்திய மாநிலங்களில் தீவிர பிரச்சாரம்

நரேந்திர மோடி, தென்னிந்திய மாநிலங்களில் தீவிர பிரச்சாரம்

307
0
SHARE
Ad

சென்னை : தனக்கு எதிராக – தரக்குறைவான எத்தனையோ விமர்சனங்களை திமுகவினர் முன் வைத்தாலும்- அவர் தமிழ்நாட்டில் தெருத்தெருவாக ஐஸ் கிரீம் விற்கிறார் என கேலி செய்தாலும்- அதை எல்லாம் பொருட்படுத்தாது – தொடர்ந்து பல ஊர்களில் தனது பிரச்சாரத்தை தீவிரமாக முடுக்கி விட்டிருக்கிறார் மோடி. சாலை சாலையாக ஊர்வலம் செல்கிறார்!

மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது என சிறுபான்மையினரும் தமிழ்நாட்டில் ஒரு கணிசமான பிரவினரும் கருதுகிறார்கள் என வைத்துக் கொண்டாலும்- மோடிதான் மீண்டும் வரவேண்டும் என தமிழ்நாட்டின் ஒரு பிரிவினர்  பல காரணங்களுக்காக விரும்புகிறார்கள் என்பதையும் நாம் மறுப்பதற்கு இல்லை. காரணம் அவருக்கு இணையான அல்லது மாற்றான இன்னொரு தலைவரை திமுகவினரால் – இந்தியா கூட்டணியினரால் – அடையாளம் காட்ட முடியவில்லை.

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை (ஏப்ரல் 15) திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய மீண்டும் தமிழ்நாடு வந்தார் மோடி.

#TamilSchoolmychoice

இன்று மேற்கு வங்காளம் மாநிலத்திலும் மோடி பிரச்சாரத்தை மேற்கொண்டார்.