Home இந்தியா பாஜக: வடக்கில் தேர்ந்தாலும், தமிழகத்தில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் பின்னடைவு!

பாஜக: வடக்கில் தேர்ந்தாலும், தமிழகத்தில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் பின்னடைவு!

735
0
SHARE
Ad

சென்னை: இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அதில் இரண்டாம் கட்டத்தின் கீழ் தமிழ்நாடு வருகிறது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. இதற்கிடையே, வேலூரில் நடக்கவிருந்த தேர்தல் இரத்தானது. 38 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 18- ஆம் தேதி நடைபெற்றது.

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி உயிரிழந்தது தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர்களின் இடத்தை ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வத்திடமும், மறுப்பக்கம் மு..ஸ்டாலினிடமும் விட்டுச் சென்றுள்ளனர்.

இரண்டாக உடைந்த அதிமுக அணியில் ஓர் அணியாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வமும் மற்றொரு அணியாக சசிகலா, டிடிவி தினகரன் இருக்கின்றனர். இதில் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான ஆர்.கே.நகரிலே தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று தங்களது அணியே உண்மையான அதிமுக என டிடிவி தினகரன் கூறிவருகின்றனர்

#TamilSchoolmychoice

இந்நிலையில் தமிழகத்தில் பாஜக உடன் கூட்டணி அமைத்த அதிமுக பெருத்த பின்னடைவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், பாஜக சார்பில் தூத்துக்குடி, கோயம்புத்தூர், சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரியில் போட்டியிட்ட வேட்பாளர்களும் பெருமளவில் பின்னடைவு அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.