கோலாலம்பூர்: குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு உதவும் பொருட்டில் நம்பிக்கைக் கூட்டணி அரசு மெட்ரிகுலேஷன் வகுப்புகளைத் தவிர்த்து இதர கல்வி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி வருவதாக பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி கூறினார்.
“மெட்ரிக்குலேஷனை மட்டும் குறியாக நாம் கொள்ளக்கூடாது. குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு (பி40) தரமான கல்வியை பெறுவதற்கு பல திட்டங்களை நம்பிக்கைக் கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது” என அவர் கூறினார்.
“இது ஓர் அடிப்படை பிரச்சினை என்று நான் நினைக்கிறேன். இந்த விவகாரம் (மெட்ரிகுலேஷன்) தொடர்பில் இனி சர்ச்சை எழக் கூடாது. அமைச்சரவையின் ஒன்றுபட்ட கருத்து இதுவாகும். சிறந்த முடிவுகளை எடுக்கும் பி40 தரப்பினர் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல வேறு வழிகளையும் நாங்கள் கண்டறிந்து வருகிறோம்” என அவர் கூறினார்.
“அடிப்படையில் அவர்களுக்கு உதவி செய்தோமா இல்லையா என்பதுதான் கேள்வி” என்று அஸ்மின் கூறினார்.