Home இந்தியா அண்ணாமலை விலகினார்! தமிழ் நாடு பாஜகவின் புதிய தலைவர் வானதி!

அண்ணாமலை விலகினார்! தமிழ் நாடு பாஜகவின் புதிய தலைவர் வானதி!

373
0
SHARE
Ad
வானதி சீனிவாசன்

சென்னை : கடந்த சில ஆண்டுகளாக தமிழ் நாடு பாஜக தலைவராக சிறப்பாக செயல்பட்டு வந்ததோடு, பல சர்ச்சைகளின் நாயகனாகவும் திகழ்ந்த கு.அண்ணாமலை பாஜக தமிழ் நாடு தலைவராகப் பதவி விலகியுள்ளார் எனவும் அவருக்குப் பதிலாக தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாவகும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அண்ணாமலை இலண்டனுக்கு 6 மாத கால அரசியல் பயிற்சி பெறுவதற்காக செல்லவிருக்கிறார் என்றும் ஏற்கனவே தகவல்கள் தெரிவித்தன.

கு.அண்ணாமலை

அண்ணாமலை தமிழ் நாட்டில் தனித்து இயங்க வேண்டும் என்ற சிந்தனையை முன்வைத்து அதற்கான செயல் நடவடிக்கைகளில் இறங்கினார். இதன் காரணமாகவும், அவரின் சில பகிரங்க கருத்துகள் காரணமாகவும் அதிமுகவுடனான பாஜக உறவு முறிந்தது.

#TamilSchoolmychoice

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் இரு கட்சிகளுமே எந்தத் தொகுதியையும் வெல்ல முடியாமல் மோசமானத் தோல்வியைத் தழுவின.

வானதியின் தலைமைத்துவத்தின் கீழ் தமிழ் நாடு பாஜகவின் வியூகங்கள் மாறுமா? அதிமுகவுடன் மீண்டும் உறவு மலருமா? எடப்பாடி பழனிசாமி மனம் மாறி பாஜகவுடன் கூட்டணி அமைப்பாரா? அல்லது தனித்தே போட்டியிடுவாரா? என்ற கேள்விகளும் அண்ணாமலை பதவி விலகலால் எழுந்துள்ளன.