Home இந்தியா எல்.முருகன், தமிழ் நாடு சார்பில் மீண்டும் இணை அமைச்சரானார்!

எல்.முருகன், தமிழ் நாடு சார்பில் மீண்டும் இணை அமைச்சரானார்!

325
0
SHARE
Ad
எல்.முருகன்

புதுடில்லி : தமிழ் நாட்டின் சார்பாக எல்.முருகன் மீண்டும் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஏற்கனவே, நரேந்திர மோடியின் முந்தைய அமைச்சரவையில் இணை அமைச்சராகப் பதவி வகித்த முருகன், நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமிழ்நாடு நீலகிரி தொகுதியில் போட்டியிட்டார். அதே தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் ஆ.ராசா வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து முருகன் மீண்டும் இணை அமைச்சராக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

இந்திய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பதவியேற்றுக் கொண்டது. இந்திய பாரம்பரிய வழக்கப்படி அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட பின்னர் பிரதமர் அவர்களுக்கான துறைகளை அறிவிப்பார்.

முருகனுக்கு எந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.