Home இந்தியா மோடி அமைச்சரவை : ராஜ்நாத் சிங் மீண்டும் அமைச்சரானார்!

மோடி அமைச்சரவை : ராஜ்நாத் சிங் மீண்டும் அமைச்சரானார்!

302
0
SHARE
Ad
ராஜ்நாத் சிங்

புதுடில்லி : நரேந்திர மோடியின் முந்தைய அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் மீண்டும் அமைச்சராக இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

இந்திய அமைச்சரவை இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பதவியேற்றுக் கொண்டது. இந்திய பாரம்பரிய வழக்கப்படி அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட பின்னர் பிரதமர் அவர்களுக்கான துறைகளை அறிவிப்பார்.

மோடிக்கு அடுத்து இரண்டாவதாக ராஜ்நாத் சிங் பதவியேற்றுக் கொண்டதிலிருந்து பாஜக அரசாங்கத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் இரண்டாவது நிலை கௌரவம் இன்றைய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில் வெளிப்பட்டது.