Home இந்தியா மோடி 3.0 சகாப்தம் தொடங்கியது! பிரதமராகப் பதவியேற்றார்!

மோடி 3.0 சகாப்தம் தொடங்கியது! பிரதமராகப் பதவியேற்றார்!

313
0
SHARE
Ad
மறைந்த முன்னாள் இந்தியப் படைவீரர்களுக்கு மோடி இன்று (ஜூன் 9) அஞ்சலி செலுத்தியபோது…

புதுடில்லி : இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவிற்குப் பின்னர் இந்திய வரலாற்றில் முதன் முறையாக தொடர்ச்சியாக 3-வது முறையாக நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். இந்திய நேரப்படி மாலை 6.00 மணிக்குத் தொடங்கிய பாரம்பரிய சடங்குபூர்வ நிகழ்ச்சியில் மோடி பிரதமராக இந்தி மொழியில் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார்.

அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

மோடியின் பதவியேற்பு விழாவில், இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களான அதானியும் அம்பானியும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினிகாந்தும் மனைவி லதாவுடன் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து சிறப்பித்தார்.

#TamilSchoolmychoice

புதுடில்லி அதிபர் மாளிகையில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட பதவியேற்பு நிகழ்ச்சியை அதிபர் திரௌபதி முர்மு நடத்தி வைத்தார்.