Home இந்தியா மோடி அமைச்சரவை : 3 தமிழர்கள் – 2 அமைச்சர்கள், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் –...

மோடி அமைச்சரவை : 3 தமிழர்கள் – 2 அமைச்சர்கள், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் – ஓர் இணை அமைச்சர் எல்.முருகன்!

373
0
SHARE
Ad
ஜெய்சங்கர்

புதுடில்லி : நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் 9-ஆம் தேதி 3-வது தவணைக்குப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடியின் அமைச்சரவையில் 3 தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர்.

முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியம் மீண்டும் அமைச்சராக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். அவர் தொடர்ந்து வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அவர் மீண்டும் நிதியமைச்சராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்சங்கர் பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாநிலங்களவை (ராஜ்ய சபா) உறுப்பினராகப் பதவி வகிக்கிறார்.

#TamilSchoolmychoice

நிர்மலா சீதாராமனின் கணவர் பரக்கலா பிரபாகர் தேர்தல் பிரச்சாரக் காலகட்டத்தில் தொடர்ந்து மோடிக்கு எதிரான கருத்துகளை உதிர்த்து வந்தார். தேர்தல் முடிவுகளை ஓரளவுக்குத் துல்லியமாக அவர் கணித்திருந்ததும் அரசியல் பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விடைபெற்றுச் செல்லும் முந்தைய மோடி அமைச்சரவை உறுப்பினர்களுக்கு அதிபர் அளித்த விருந்தில் நிர்மலா சீதாராமன்

பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அளித்த பின்னர் வழங்கிய நேர்காணலிலும் மோடியின் ஆட்சி நீண்ட நாட்களுக்குத் தாக்குப் பிடிக்காது எனக் குறை கூறியிருந்தார். இருப்பினும் நிர்மலா மீண்டும் அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

நிர்மலாவும் பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை. அந்த அளவுக்கு என்னிடம் பணமில்லை என அவர் கூறியிருந்தார். கர்நாடக பிரதேசம் மாநிலத்திலிருந்து அவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இணை அமைச்சராக எல்.முருகன் நியமனம்

தமிழ் நாட்டின் சார்பாக எல்.முருகன் மீண்டும் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஏற்கனவே, நரேந்திர மோடியின் முந்தைய அமைச்சரவையில் இணை அமைச்சராகப் பதவி வகித்த முருகன், நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமிழ்நாடு நீலகிரி தொகுதியில் போட்டியிட்டார். அதே தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் ஆ.ராசா 240,585 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் முருகன் மீண்டும் இணை அமைச்சராக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) நியமிக்கப்பட்டார்.

இந்திய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பதவியேற்றுக் கொண்டது. இந்திய பாரம்பரிய வழக்கப்படி அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட பின்னர் பிரதமர் அவர்களுக்கான துறைகளை அறிவிப்பார்.

முருகனுக்கு எந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.