Home உலகம் ஜெய்சங்கருடன் இலங்கை அதிபர் அனுரா சந்திப்பு

ஜெய்சங்கருடன் இலங்கை அதிபர் அனுரா சந்திப்பு

316
0
SHARE
Ad
ஜெய்சங்கர் – அனுர திசாநாயக்கா அக்டோபர் 4-இல் கொழும்புவில் சந்தித்தபோது…

கொழும்பு : இலங்கையின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனுர திசாநாயக்காவை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) சந்தித்து இருநாட்டு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்.

இலங்கைக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் ஜெய்சங்கர் இலங்கையுடனான பல்முனை ஒத்துழைப்புகள் குறித்து விவாதித்தார். இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவின் கடப்பாட்டையும் ஜெய்சங்கர் மறுஉறுதிப்படுத்தினார்.

தமிழக மீனவர்கள் விவகாரம் உள்ளிட்ட பல அம்சங்களை ஜெய்சங்கர் அனுராவுடன் கலந்துரையாடினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் வருகை தரும் முதல் அயல்நாட்டு வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர் திகழ்கிறார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் அதிபர் அனுரா மேற்கொள்ளவிருக்கும் முதல் வெளிநாட்டு வருகை இந்தியாவுக்கானதாக இருக்கும் எனவும் அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.